சுகாதாரப் பணியாளர்களுக்கு வேல்ஸில் வேலை வாய்ப்பு
அடுத்த ஆண்டு பிரிட்டனின் வேல்ஸுக்கு மேலும் 200 சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடனான சந்திப்பின் போது, வேல்ஸின் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரவை செயலாளர் ஜெர்மி மைல்ஸ் இதை அறிவித்தார். ஒரு வருடத்தில் நோர்கா ஆட்சேர்ப்பு மூலம் 350க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் வேல்ஸுக்கு வந்தனர். வேல்ஸின் சுகாதாரத் துறையில் கேரளாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் விலைமதிப்பற்றவை என்றும் ஜெர்மி மைல்ஸ் முதலமைச்சரிடம் தெரிவித்தார். அதே போன்று வேல்ஸின் ஒத்துழைப்புக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் ஏற்கனவே வேல்ஸுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பின்னர் 2024 மார்ச் 1, அன்று வேல்ஸுக்கு சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. “வேல்ஸ் இன் இந்தியா 2024” நடவடிக்கைகளின் நிறைவு விழாக்களின் ஒரு பகுதியாக ஜெர்மி மைல்ஸ் தலைமையிலான குழு கேரளத்திற்கு வந்தது. முதலமைச்சரின் அறையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தூதர் மிட்ச் தீக்கர், பிரிட்டிஷ் தூதரக துணைத் தலைவர் ஜேம்ஸ் கார்டன், தனிச் செயலாளர்கள் வில்லியம் தாமஸ் மற்றும் ஜோனாதன் புரூம்பீல்ட், நோர்கா செயலாளர் டாக்டர் கே வாசுகி, தலைமை நிர்வாக அதிகாரி அஜித் கோலாசேரி, தென்னிந்தியா வுக்கான மேலாளர் பின்சி எஷோ மற்றும் என்எச்எஸ் பணியாளர்கள் இயான் ஓவன் ஆகியோரும் முதல்வருடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.