world

img

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் நிறுத்தப்பட வேண்டும் சர்வதேச அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு

பெய்ஜிங், மே 30- பாலஸ்தீனம் மீது கொடூரமான யுத்தத்தை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், இப்போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அமைதி மாநாட்டிற்கு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில், அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் பேசுகையில் ஜின்பிங் இந்த அறைகூவலை முன்வைத்துள்ளார்.

‘இரு நாடுகள்’ கோட்பாடே அமைதிக்கு தீர்வு
மக்கள் சீனக் குடியரசு - அரபு நாடுகள் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் துவக்க உரை நிகழ்த்திய அவர், போர் தீவிர மடைந்து வரும் சூழலில் நீதி வழங்கப்படாமல் இருக்கக் கூடாது. ‘இரு  நாடுகள்’ (பாலஸ்தீனம், இஸ்ரேல்) என்ற தீர்வை மாற்ற முடியாது என்று கூறி யுள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் சீனா வும், அரபு நாடுகளும் தொடர்ந்து பாலஸ் தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரு கின்றன. மக்கள் சீனத்தின் கம்யூனிஸ்ட் அரசு நீண்டகாலமாக பாலஸ்தீனர்களை ஆதரித்து வருவதோடு ஆக்கிரமிக்கப் பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ் ரேல் உருவாக்கி வரும் குடியேற்றங் களையும் கண்டித்து வருகிறது.  

மத்தியக் கிழக்கு  நாடுகளுடன் நல்லுறவு

இத்தகைய சூழலுக்கு இடையே, மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்ந்து நல்லுறவுகளை பேணி வருவதோடு, அந்நாட்டு பொருளாதாரத் தேவை களுக்கும் முன்னேற்றத்திற்கும் சீனா முன்னுரிமை கொடுத்து வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் விளையாட்டுத் துறை, சுகா தாரத்துறை என பல துறைகளில் பல  நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்து அத்துறைகளின் உள்கட்டமைப்புகளை யும் தொழில்நுட்பங்களையும் சீனா  அரசு மேம்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

முதலீடுகள் அதிகரிப்பு

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலம் உள்ளிட்ட எகிப்து நாட்டின் பல அரசு திட்டங்களில் மக்கள் சீனம், கோடிக் கணக்கான டாலர்களை ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது. இதே போல துனீசியாவுடன் வர்த்தகம் மேற்கொள் ளும் நான்காவது நாடாக சீனா உள்ளது.  

மத்திய கிழக்கு நாடுகளுடன் மின்னணு இயந்திரங்கள், 5ஜி தொழில்நுட்பம், பிற இணைய சேவை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் தனது ஏற்றுமதியை சமீபகாலங்களில் சீன அரசு அதிகரித்துள்ளது. 

ஒப்பந்தங்களில் கையெழுத்து

அந்த அடிப்படையிலேயே, இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக எகிப்து ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா - சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் இருநாடுகளின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், உணவு இறக்குமதி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்ப தற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட் டனர்.

இந்த மாநாட்டின் போது தான், பாலஸ்தீனம் மீது கொடூரமான யுத்தத்தை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், இப்போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அமைதி மாநாட்டிற்கு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

தூதரை திரும்பப் பெற்றது பிரேசில் 

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல்களை பிரேசில் இடதுசாரி அரசாங்கம் தொடர்ச்சியாக கண்டித்து வருகிறது. மேலும் ‘இரு நாடுகள்’ தீர்வை அமல்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் தான், தற்போது காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலை தாக்குதல்களை கண்டித்து  இஸ்ரேலுக்கான தனது தூதரை பிரேசில் திரும்பப் பெற்றுள்ளது. இதனை பிரேசில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  2023 இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது போர் துவங்கிய ஒரு மாதத்திலேயே கொலம்பிய இடதுசாரி அரசும், தனது தூதரைத் திரும்பப் பெற்றதுடன், 2024 மே மாதம் மூன்றாம் வாரம் பாலஸ்தீன த்தின் ரமல்லாவில் தங்கள் நாட்டு தூதரகத்தை திறந்தது குறிப்பிடத்தக்கது.



 

;