world

img

ஜப்பான், இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் டிரம்ப் அறிவிப்பு

ஜப்பான், இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்

டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்,ஜூலை23- ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.  ஜப்பானுடன் பரஸ்பரமாக 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும். எனவும் அந்நாடு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்யும்.  அது அமெரிக்காவுக்கு 90 சதவீதம் பயனளிக்கும். அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் தனது ட்ரூத் சமூக தளத்தில் தெரிவித்துள்ளார். அதே போல இந்தோனேசியாவுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டதாகவும்,  இரு நாடுகளுக்கும் இடையிலான கூடுதல் வரி விதிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அந்நாட்டுடன் 19 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.