world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீனா : நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ ரயில் பாதை 

2021 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில் சீனாவில் அதிவேக ரயில் பாதை  10,000 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சீனாவில் பயன்பாட்டில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 162,000 கி.மீ.யை எட்டியுள்ளது என்று அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் லியு வெய் தெரிவித்துள்ளார். சீனா உள்நாட்டு போக்குவரத்தை பலப்படுத்தி மேம்படுத்தும் வகையில் அதிவேக ரயில்களையும் ரயில் பாதைகளையும் அதிவேகமாக கட்டமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் மூலம் ரஷ்யாவை  தாக்க ஐரோப்பா திட்டம்  

தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மூலமாக ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இத்தாலியைச் சேர்ந்த கட்டுரையாளர் ஃபேப்ரிசியோ போகி எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஐரோப்பிய கேடயம்” என்ற திட்டத்தை  அதற்காகத் தான் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இதன் பின்னணியில் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் உள்ள நேட்டோ நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரானை மீண்டும் தாக்குவேன்  என டிரம்ப் மிரட்டல் 

“தேவைப்பட்டால் மீண்டும் ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்குவேன்” என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரே லும் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சியை அழிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததால் இரண்டாவது முறையாக அவை ஈரானைத்  தாக்கலாம் என “நோ கோல்டு வார்” என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்தி ருந்த சில நாட்களில் டிரம்பின் மிரட்டல் வந்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் யுரேனிய செறிவூட்டல் மையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் எங்கள் ஆராய்ச்சியை தொடர்வோம் என ஈரான் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி மீது விமானம் மோதல்  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது பயிற்சி போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்கள் எண்ணிக்கை  27 ஆக அதிகரித்துள்ளது. 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனா். விமானப் படைத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்ட எஃப்-7 பிஜிஐ என்ற போர் விமானம் ஒரு பள்ளிக் கட்டடம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.  முதல்கட்ட விசாரணையில், இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசாவில் இஸ்ரேலின் உணவு  விநியோக முறை ஆபத்தானது 

காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் உணவு விநியோக முறை ஆபத்தா னது என்று இங்கிலாந்து உள்ளிட்ட 28 நாடு கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யில் காசாவில் நடைபெறும் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். இஸ்ரேல் அரசின் நிவா ரணப் பொருள் விநியோக முறை ஆபத்தானது. அது பாலஸ்தீனர்களின் உரிமையை பறிக்கி றது. உணவுகளைப் பெற முயலும் குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்வதை கண்டிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.