states

img

சைவமா? அசைவமா? என மிரட்டும் இந்துத்துவா அமைப்பினர்!

உ.பி-யில் உணவு டெலிவரி செய்பவர்களை வழிமறித்து சைவமா? அசைவமா? என இந்துத்துவ அமைப்பினர் மிரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரோலி நகரில் டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் நபரை வழிமறித்து, இது சைவமா? அசைவமா? என இந்துத்துவா அமைப்பினர் கேட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இந்துக்களின் புனித மாதமான சாவான் மாதத்தில் அசைவம் விற்க கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிய நிலையில் பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 
மேலும் சில நாட்களுக்கு முன்பு காசியாபாத் பகுதியில் KFC உணவகத்தில் இந்து ரக்‌ஷா தள் அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டு இழுத்து மூடியது சர்ச்சையான நிலையில் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.