tamilnadu

img

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை!

பரிகார பூஜை செய்வதாகக் கூறி இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. குடும்ப பிரச்சினைகள் மற்றும் உடல் நலக்குறைவு நீங்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி, குற்றவாளி ஜோதிடர் ராமகிருஷ்ணன் என்பவர் இரண்டு சிறுமிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிடரை கைது செய்தனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்து, குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு(52) மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும், சிருமிகளுக்கு தலாரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்க அரசு உத்தரவு