india

img

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து ரூ.30 கோடி நன்கொடை பெற்ற பாஜக!

இந்தியாவில் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான அல்லானா குழுமத்திடமிருந்து பாஜக ரூ.30 கோடி நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
மாட்டுக் கறி ஏற்றுமதி துறையில் முன்னணி வகிக்கும் அல்லானா குழுமம், 2024–2025 நிதியாண்டில் பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட நன்கொடைகளை விட இது பல மடங்கு அதிகமாகும்.
இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு வருமானவரி துறை நடத்திய விரிவான சோதனைகளுக்கு பிறகு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பஜகவுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியது. 
2019 ஆம் ஆண்டில் ரூ.7 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி பாஜகவிற்கு வழங்கப்பட்டதாகவும் பொது தரவுகள் காட்டுகின்றன.
அதனைத் தொடர்ந்து 2023–24 காலகட்டத்திலும் பாஜகவிற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் 2024–25 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.30 கோடி நன்கொடை, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நன்கொடை, இந்தியாவின் மாட்டுக் கறி ஏற்றுமதி 2025 இல் 4 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை அளவை எட்டியுள்ள நிலையில் வழங்கப்பட்டுள்ளாது. அல்லானா குழுமத்தின் பல துணை நிறுவனங்கள் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒருபுறம் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என கூறிவிட்டு மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடமிருந்து பாஜக நன்கொடைகள் பெறுவது குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாட்டிறைச்சி அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது