விழிஞ்ஞம் துறைமுகம் ரூ.2,000 கோடி மேம்பாட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கேரளத்தின் கடல்சார் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக விழிஞ்ஞம் சர்வதேச துறை முகத்தில் பெரிய அளவிலான தளவாட மாஸ்டர் திட்டத்தை மாநில அரசு அறி முகப்படுத்த உள்ளது. ஒன்றிய பொ துத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கான்கார் (CONCOR - Container Corporation of India) மற்றும் மத்திய கிடங்கு வாரி யம் (Central Warehousing Corporation - CWC) ஆகியவற்றுடன் திங்களன்று முத லமைச்சர் பினராயி விஜயன் முன்னிலை யில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தானது. விழிஞ்ஞத்தை முழுமை யான பொருளாதார மேம்பாட்டு மைய மாக மாற்றுவதே இதன் நோக்கம். ரூ.2,000 கோடி மதிப்பிலான உள்கட்ட மைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. திங்களன்று காலை 10.15 மணிக்கு சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் நடைபெற்ற விழாவில் துறை முக அமைச்சர் வி.என்.வாசவன், துறை முகச் செயலாளர் டாக்டர் ஏ.கௌசிகன், விஷ் நிர்வாக இயக்குநர் டாக்டர் திவ்யா எஸ். அய்யர் மற்றும் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுத்துறையில் பொருட்களை நகர்த்துவதற்கு எரிபொருள், யார்டுகள் மற்றும் ரயில் போக்குவரத்தை அரசாங் கம் வழங்குகிறது. இந்த மேம்பாட்டு மாதிரி, பொருட்களின் இயக்கத்தில் ஏக போகத்தைத் தடுக்கும் மற்றும் வர்த்த கர்களுக்கு நியாயமான விலைகளை வழங்கும், நாட்டின் கடல்சார் பாது காப்பை உறுதி செய்யும் மற்றும் மாநி லத்தின் நலன்களைப் பாதுகாக்கும். ரூ.2000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொ ருள் பாதுகாப்பிற்காக ரூ.700 கோடியை முதலீடு செய்யும். பெரிய கப்பல்களு க்கு எரிபொருள் நிரப்ப ஒரு பெரிய தரை மட்ட தொட்டி கட்டப்படும். இதன் மூலம், விழிஞ்ஞம் இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான எரிபொருள் மையமாக மாறும்.
போக்குவரத்து வலையமைப்பிற் காக ரூ.600 கோடி கான்கார் முதலீடு. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள கான்கார், நாடு முழுவதும் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல கொள் கலன் கிடங்குகள் மற்றும் சரக்கு இயக்க அமைப்புகளை உருவாக்கும். தளவா டப் பூங்காவிற்கு மத்திய கிடங்கு வாரி யம் ரூ.700 கோடியை முதலீடு செய்யும். ஒரு அதிநவீன மல்டி-மாடல் லாஜிஸ்டி க்ஸ் பூங்கா மற்றும் பெரிய கிடங்குகள் கட் டப்படும். அரசாங்கத்திற்கு எந்த நிதிச் சுமையும் இல்லாமல் கட்டப்படும் இந்த பூங்காவில், பெரிய குளிர்பதன கிடங்குகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான அலகுகள் பொருத்தப்பட்டிருக்கும்.
