கோவையில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 37 இடங்களில் சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் அங்கு காலாவதியான பேரிச்சம்பழங்கள் இருப்பது தெரிய வந்தது.
பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு இருந்தபேரிச்சம் பழங்களை அங்கேயே பறிமுதல் செய்து மொத்தம் 278 கிலோ எடையிலான பேரிச்சம் பழங்களை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் மொத்தமாக அழித்தனர்.