tamilnadu

img

‘கண்ணே... உயிரே... வி.எஸ்-ஸே…!’; விண்ணதிர எழுந்த உணர்ச்சிமிகு முழக்கம்!! விடைபெற்றார் தோழர் வி.எஸ்.!

‘கண்ணே... உயிரே... வி.எஸ்-ஸே…!’; விண்ணதிர எழுந்த உணர்ச்சிமிகு முழக்கம்!! 

விடைபெற்றார் தோழர் வி.எஸ்.!

ஆலப்புழா, ஜூலை 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலை வர்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல்வரும், மாபெரும் தலைவருமான - தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மக்களிடமிருந்து விடைபெற் றார்.  தங்களின் நேசமிக்க தலை வனுக்கு, கண்ணே... உயிரே... வி.எஸ்.ஸே... குட்டநாட்டின் மணி முத்தே... எங்கள் இதய ரோசாப்  பூவே... என்று உருக்க மான உணர்ச்சிமிகு முழக்கங் களுடன் கேரள மக்கள் விடை கொடுத்தனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தின் தர்பார் அரங்கில் இருந்து செவ்வாயன்று  பிற்பகல் 2 மணியளவில் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடலைத் தாங்கிய - கேரள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, ஆழப்புழாவை நோக்கி பயணத்தைத் துவக்கியது.

வழி நெடுகிலும்  கண்ணீர் அஞ்சலி

அன்று நள்ளிரவே ஆலப் புழா மாவட்டம் வேலிகக்கத்து வீட்டை சென்றடைய திட்ட மிடப்பட்டிருந்தது.  ஆனால், திருவனந்தபுரம் மாவட்டத்தைக் கடந்து கொல்லம் மாவட்டத்திற்குள் நுழையவே நள்ளிரவு ஆகி விட்டது. கேரள மக்கள் தங்களின் அன்புத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 26 மையங்களில் பேருந்து நிறுத்தப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இதனால், இரவு முதல் கனமழை பெய்த போதிலும், வழியெங்கும் பல்லாயிரக்கணக்  கான மக்கள் கூடி, தோழர் வி.எஸ்.ஸூக்கு கண்ணீர் அஞ்ச லியையும், செவ்வணக்கத்தை யும் செலுத்தினர். உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட்டனர்.  

மழையை பொருட்படுத்தாத குழந்தைகள் - முதியவர்கள்!

இதனால், திட்டமிட்டிருந்த 26 மையங்கள் மட்டுமன்றி, வழிநெடுகிலுமே பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டதால், குறிப்பிட்ட இடத்தைக் கடந்து செல்ல முடியாமல் ஏராளமான இடங்களில் இறுதிப்பயண வாகனத்தை நிறுத்திச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், குழந்தை கள் மற்றும் முதியவர்கள் உட்பட பெரிய கூட்டம் நள்ளிரவிலும் சாலையோரத்தில் தோழர் வி.எஸ்.ஸுக்கு அஞ்சலி செலுத்தக் காத்திருந்தது.

ஆலப்புழாவிற்குள் நுழையவே 17 மணி நேரமானது

இவ்வாறு 17 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர், புதன்கிழமை காலை 7 மணிக்குப் பிறகே  ஓச்சிராவிலிருந்து துக்க ஊர்வலம் ஆலப்புழா மாவட்டத்திற்குள் நுழைந்தது.  அன்புக்குரிய தலைவர் வி.எஸ். அச்சு தானந்தனின் முகத்தை இறுதியாக ஒருமுறை காண  ஆயிரக்கணக்கான மக்கள் வழியெங்கும் திரண்டிருந்தனர். வி.எஸ். ஏந்திய சிவப்புக் கொடி களை அசைத்து, கோஷங்களை எழுப்பியபடி, கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் வி.எஸ்.ஸுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த னர். சிலர் வி.எஸ்.ஸைப் பார்க்க தொலைதூரத்தி லிருந்து வந்திருந்தனர்.

வி.எஸ்.ஸே.. இதய ரோசாவே.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்

வி.எஸ்.ஸின் சலனமற்ற உடல், கடைசிப் பயண மாக வேலிகக்கத்து வீட்டை புதன் நண்பகல் 12.20  மணிக்குச் சென்றடைந்தது. அப்போது, அங்கு கூடி  நின்ற ஆயிரக்கணக்கானோர், ‘இல்லை, இல்லை,  இறக்கவில்லை, அன்புத் தோழர் இறக்கவில்லை.  எங்களில் ஊடே வாழ்கிறீர்கள்... கண்ணே கரளே வீ.எஸ்.ஸே, எங்கள் இதய ரோசாப்பூவே, குட்ட நாட்டின் மணிமுத்தே’, என இதயத்தின் அடி நாளத்திலிருந்து விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். குடும்ப உறுப்பினர்களும், அவரது சகாக்களும் புன்னப்புரா மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  

அரசியல் தலைமைக்குழு செவ்வணக்கம்

இறுதியாக 24 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான பி.  கிருஷ்ணபிள்ளை நினைவகத்திற்கு வி.எஸ்ஸின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இங்கும், வி. எஸ்ஸுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்தி ருந்தனர்.  முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் எம்.ஏ.  பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, ஏ. விஜயராக வன், விஜூ கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பி னர்கள், கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந் தன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், எல்.டி.எப். ஒருங்கிணைப்பாளர் டி.பி. ராமகிருஷ் ணன், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.  சதீசன், முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் சாதிக்  அலி தங்ஙள், அகில இந்தியச் செயலாளர் கே. குஞ்ஞாலி குட்டி, என்.கே. பிரேமச்சந்திரன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அமைப்புகளின் தலை வர்கள், மத மற்றும் சமூகத் தலைவர்கள் மற்றும்  கலாச்சார ஆர்வலர்கள், மாவட்டக்குழு அலுவல கத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் தோழர் வி.எஸ்.சின் உடல், அங்கி ருந்து திருவம்பாடி சந்திப்பு, பொது மருத்துவ மனை சந்திப்பு, ஆட்சியர் அலுவலக சந்திப்பு வழி யாக, ஆலப்புழா கடற்கரை மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின், மாலை 5 மணியளவில் போராளிகள் அடக்கம் செய்யப்படும் பெரிய சுடு காட்டில் தோழர் வி.எஸ்.சின் உடலை தகனம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு தங்களின் ஆதர்ச தலைவனுக்கு அஞ்சலி  செலுத்த லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கால தாமதமாக, இரவு 9 மணியளவில்  முழு அரசு மரியாதையுடன் காவல்துறையின் 24  குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.