tamilnadu

img

முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க மோடி அரசு மறுப்பு நாடாளுமன்ற இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கின!

முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க மோடி அரசு மறுப்பு நாடாளுமன்ற இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கின!

புதுதில்லி, ஜூலை 23 - பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு தல், ஆபரேசன் சிந்தூர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் ஆகிய முக்கியப் பிரச்சனைகள் குறித்து, விவாதிப்பதற்கு மோடி அரசு  தொடர்ந்து மறுத்து வருவதால், நாடா ளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக முடங்கியது. எதிர்கட்சிகளின் நியாயமான கேள்விகளை எதிர்கொள்ள பயந்து கொண்டும், அவர்களது கேள்வி களுக்கு தார்மீக ரீதியாக விளக்க மளிக்க மறுத்தும் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவை களின் நடவடிக்கைகளையும் மோடி அரசு சீர்குலைத்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21 அன்று துவங்கியது. முதல் நாளிலிருந்தே ஆபரேசன் சிந்தூர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஆனால் அது குறித்து விவாதிக்க எந்த முறையான நடவடிக்கைகளையும் மோடி அரசு எடுக்கவில்லை.  குறிப்பாக, அவையின் பிற அலு வல்களை ஒத்திவைத்து விட்டு, இந்த முக்கிய பிரச்சனைகளை விவாதத்து க்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளி லும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு ஒப்புக் கொள்ளாத மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலை வர் ஆகியோர், கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்ட மிட்டபடி நடக்கும் என்றும், அதே  நேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர்கள் சப்பைக் கட்டு கட்டி வருகின்றனர். இதனால், ஜூலை 21 மற்றும் 22  அன்றும் இரு அவைகளும் அடுத்த டுத்து ஒத்திவைக்கப்பட்டன. மூன்றாம் நாள் ( ஜூலை 23) காலை 11 மணிக்கு அவைகள் கூடியபோது இரு அவை களிலும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மக்களவையில் சபாநாயகரின் இருக் கையை சூழ்ந்து கொண்டு பதாகை களை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கை யை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் போராட்டக் குரலை எழுப்பினர். மக்களவை  மக்களவையில் காலையில் கேள்வி நேரத்தை துவங்கிய சபாநாய கர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து வந்த தால் அவையை 2 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையும் எதிர்க்கட்சிகளையும் அவர் கொச்சைப்படுத்தினார். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என மிரட்டலும் விடுத்தார்.  அவை மீண்டும் கூடியபோது தெலுங்குதேசம் கட்சித் தலைவர் கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி அவைத் தலைவராக இருந்தார். அப்போதும் எதிர்க்கட்சியினர் போரா ட்டம் நடத்தினர். “SIR வாபஸ் லோ (SIR-ஐ திரும்பப் பெறு)” என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், அவர், அவை நடவடிக்கைகளை முழுமையாக ஒத்திவைத்தார்.  மாநிலங்களவை  இதேபோல், மாநிலங்களவை துணைத் தலைவரான ஹரிவன்ஷ் தலைமையில் மாநிலங்களவை நடைபெற்றது. அப்போது அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தில்லியில் குடிசைகளை இடிப்பது, வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாடு, விமானப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கக் கோரி விதி 267 இன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான 25  நோட்டீஸ்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். எனினும் விவாதத்திற்குள் அவர் செல்லாமல் நோட்டீஸ்களை நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என கோஷம் எழுப்பவே, அவையை 12 மணி வரை ஒத்திவைப்ப தாக ஹரிவன்ஷ் அறிவித்தார். அதன் பிறகு அவை கூடிய போதும் போராட்டம் தொடர்ந்ததால், அவையின் முழு நடவடிக்கையையும் ஒத்திவைத்தார்.  மோடி அரசின் பிடிவாதத்தால், மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் மூன்று நாட்களும் முடங்கின.

பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.