tamilnadu

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் சகோதரர் மு.க. அழகிரி தகவல்

முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் சகோதரர் மு.க. அழகிரி தகவல்

சென்னை, ஜூலை 23 - முதல்வர் மு.க. ஸ்டாலின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவரை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இரண்டாவது நாளாக சென்று மூத்த சகோதரர் மு.க. அழகிரியிடம் நலம் விசாரித்தார். அப்போது, முதல்வரின் உடல் நலம் குறித்து, செய்தியா ளர்கள் அழகிரியிடம் எழுப்பிய கேள்விக்கு, “முதல்வர் நலமாக இருக்கிறார். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வீடு  திரும்புவார்” என்று தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், “முதல்வரின் சகோதரர் மு.க.  முத்து மறைந்த அன்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள்  முழுவதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். அடுத்த நாள் காலையில் நடைபயிற்சி சென்றபோது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உடல்நலம் நன்றாக உள்ளது. அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை முடிவுகள் வெளிவரும். முதல்வர் வீடு  திரும்புவது குறித்து மருத்துவமனை தரப்பில் அறிவிப்பார் கள்” என்று தெரிவித்துள்ளார்