மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 26 ஆவது நினைவு தினம்: சிபிஎம் அஞ்சலி
திருநெல்வேலி, ஜூலை 23 - கடந்த 1999-ஆம் ஆண்டு காவல் துறையின் தடியடி மற்றும் கொலைவெறித் தாக்குதலில், ஒன்றரை வயதுச் சிறுவன் விக்னேஷ் உட்பட மாஞ் சோலை தேயிலைத் தோட்டத் தொழி லாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கொடூரம் அரங்கே றியது. ஊதிய உயர்வுக்கான போராட்டத் தில் உயிர் நீத்த தேயிலைத் தோட்டத் தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரே உள்ள கொக்கிர குளம் தாமிரபரணி ஆற்றில் ஆண்டு தோறும் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். அந்த வகையில், 26-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (ஜூலை 23) மாலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் தலைமையில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர். கருமலையான், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி. கற்பகம், முன்னாள் எம்எல்ஏ ஆர். கிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மோகன், மாரிச் செல்வம், பாளையங்கோட்டை தாலுகா குழு செயலாளர் ஆர். மதுபால், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கு. பழனி, ஆர். முருகன், சுரேஷ் முகம்மது பயாஸ், எஸ்.வி. பாலசுப்பிரமணியன், அருள்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லத்துரை, மாவட்டச் செயலாளர் மாயகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வண்ணாரப்பேட்டையில் இருந்து பேரணி நடைபெற்றது.