பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி கடன் பெற்றுத் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளார் என எஸ்.பி.ஐ உறுதிப்படுத்திய நிலையில் தில்லி மற்றும் மும்பையில் அவருக்கு தொடர்புடைய 50 நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
கடன்களைப் பெறுவதற்காக யெஸ் வங்கியின் முன்னாள் விளம்பரதாரர்கள் உட்பட மூத்த வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும். யெஸ் வங்கியிலிருந்து சுமார் 3000 கோடி ரூபாய் “சட்டவிரோத கடன் திசைதிருப்பல்” நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.