headlines

img

ஏகாதிபத்திய ரவுடித்தனம்!

ஏகாதிபத்திய ரவுடித்தனம்!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கட்டமைக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளும், நாடுகளின் இறையாண்மையும் இன்று கடு மையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயல்வது வெறும் பூகோள அரசியல் பிரச்சனை அல்ல – அது ஏகாதிபத்தியத்தின் அடிப்படை இயல்பை அம்பலப்படுத்தும் நிகழ்வாகும்.

“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்று டென்மார்க்கும், அந்த நாட்டு மக்களும் தெளி வாகக் கூறிய பிறகும், அவர்கள் மீது பொருளா தார வரிகளை விதிப்போம் என மிரட்டுவது அப்பட்டமான ரவுடித்தனமாகும். டிரம்ப் தன் ஆக்கிரமிப்பு எண்ணங்களுக்கு நியாயம் கற்பிக்க, சீனா மற்றும் ரஷ்யாவைக் காட்டி ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்துவது ஒரு பழைய தந்திரம். வியட்நாமில் கம்யூனிச அச்சுறுத்தல், இராக்கில் பேரழிவு ஆயுதங்கள், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் – இவை யெல்லாம் ஆக்கிரமிப்புக்கான சாக்குப் போக்குகளாகவே அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டன.

ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம வளங்களை யும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதை களையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அமெரிக்கா துடிக்கிறது. காலனியாதிக்க காலத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்கா வையும் ஆசியாவையும் கொள்ளையடித்தது போல், இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் வளங்கள் நிறைந்த பிராந்தியங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது.

பலப்பிரயோகம் அல்லது அச்சுறுத்தல் மூலம் பிரதேசத்தைக் கைப்பற்றுதல் சர்வதேச சட்டத்தி ற்கு முரணானது. ஐ.நா. சாசனமும் இதைத் தடை செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்த விதிகளை காலில் போட்டு மிதிக்கிறது. வெனி சுலா கப்பல்களைக் கடத்துதல், நிகரகுவாவில் தலையீடு, இப்போது கிரீன்லாந்து – இவையெல் லாம் ஒரே வடிவத்தின் வெளிப்பாடுகள்.

ரீன்லாந்தில் கனிம சுரண்டல் நடந்தால், அதன் விளைவுகள் உலகளாவியதாக இருக்கும். கிரீன்லாந்தின் பனிப்படலம் முழு வதும் உருகினால், உலகக் கடல் மட்டம் சுமார் 7 மீட்டர் (23 அடி) வரை உயரக்கூடும். லண்டன்,  நியூயார்க், ஷாங்காய் போன்ற உலகப் புகழ் பெற்ற நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். குறிப்பாக நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தையும் இது நேரடியாகத் தாக்கும். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப் படுவார்கள். மூலதனம் இயற்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. லாபம் மட்டுமே அதன் லட்சியம்.

வலிமை உள்ளவர்கள் தங்கள் விருப் பத்தைத் திணிப்பதை எதிர்க்கும் சக்திகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. ஏகாதிபத்தி யம் தானாகக் கட்டுப்படுவதில்லை, அது கட்டுப் படுத்தப்பட வேண்டும். கிரீன்லாந்து இன்று போராடுகிறது, நாளை வேறொரு நாடு இதே நிலைக்குத் தள்ளப்படலாம். ஏகாதிபத்தியத்தி ற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு இப்போதே உருவாக வேண்டும். விதிகளற்ற உலகம் அல்ல,  சமத்துவமும் நீதியும் நிலவும் உலகமே நமக்குத் தேவை.