வைகை அணையில் தூர்வாரும் பணி அடுத்த மாதம் தொடங்கும்
தேனி ,ஜன.23- வைகை அணையில் தூர்வா ரும் பணிகள் அடுத்த மாதம் தொ டங்கும் என்று விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வைகை நீர் வளத் துறை உதவி செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார் . தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜனவரி 23 வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலி கள் காப்பக துணை இயக்குநர் விவேக் பரஸ்நாத் யாதவ், மாவட்ட வன அலுவலர் அருண்குமார், உதவி வனப்பாதுகாவலர் சாய் சரண் ரெட்டி, இணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . வைகை அணையில் தூர்வாரும் பணி கூட்டத்தில் பேசிய தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலை வர் பாண்டியன் ,வைகை அணை கட்டி 67 ஆண்டுகள் ஆகிறது. தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் ,1.36 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் ஆதாரமாகவும் விளங்கு கிறது .தற்போது அணையில் மண் மேவி நீர் கொள்ளளவு குறைந்துள்ளது .நீண்டகாலமாக அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்றார் . அதற்கு பதிலளித்த வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் ,தமிழ்நாடு அரசு மேட் டூர்,பேச்சிப்பாறை ,வைகை ,அம ராவதி ஆகிய அணைகளை தூர்வார நடவடிக்கை எடுத்துள் ளது .சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. மாநில அரசு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கினால் போதும் என ஒன்றிய அரசு அனுப்பிவிட்டது. மாநில சுற்றுச்சூழல் துறை அனு மதிக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.இந்த வாரம் அனுமதி கிடைக்கும்,பிப்ரவரி மாதத்தில் வைகை அணை தூர்வாரும் பணிகள் தொடங்கும் என்றார். தாட்கோவில் திருப்பி அனுப்பிய ரூ 3 கோடி பல்வேறு மாவட்டங்களில் பட்டி யலின மக்களுக்கு வழங்கும் மானி யம் அவர்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது .தேனி மாவட்டத்தில் ரூ .3 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வந்துள்ளது.பட்டியலின மக்களின் வாழ்வா தாரத்தை பெருக்கும் வகையில் பசுக்கள் வாங்க கடனுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தினர் .மாவட்ட ஆட்சியர் உடன டியாக தலையிடுவதாக உறுதி யளித்தார். மலைக்கிராமங்களில் சாலை வசதி வருசநாடு மலைக் கிராமங்க ளில் 22 ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை .அகமலை மலை கிராமத்தில் ஊரடி முதல் ஊத்துகாடு வரை உள்ள சாலைக்கு ஊரக வளர்ச்சி முகமை நிதி ஒதுக்கியும் வனத்துறை சாலை அனுமதிக்கு காலம் தாழ்த்தி வரு கிறது .ஆபத்து காலத்தில் மனிதர்க ளை டோலி கட்டி தூக்கி வர வேண்டியுள்ளது .எனவே மலை கிராம சாலைகளுக்கு வனத்துறை வழங்க வேண்டும் என கோ ரிக்கை விடுத்தனர் . ரெங்கநாதர்கோவில் சாலை யில் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்லமுடியாமல் உள்ளது .ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் என கோம்பை பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ் வலியுறுத்தி னார் . விவசாயிகளை வெளியேற்ற முயற்சி:சிபிஎம் எருமலைநாயக்கன்பட்டி பகுதி யில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனிநபர் நிலங்களை வாங்கி,புளிய மரங்களை அனுமதியின்றி வெட்டி சோலார் பேனல் அமைத்தும் ,மற்ற விவசாயிகளுக்கு பாதை வழங்க மறுத்து வருகிறார் .மேலும் நிலங்களை என்னிடம் விலைக்கு கொடுக்க வேண்டும் என வற் புறுத்துகிறார். வருசநாடு மலை கிராமங்களில் வசித்து ,விவசாயம் செய்து வரும் விவசாயிகள் ,விவசாய கூலித் தொழிலாளர்களை வெளியேற்ற வனத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அளித்து பீதியை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாகராஜன் கூறினார் .அதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்த போது இது தொடர்பாக என் மீதும் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.நோ ட்டீஸ் தான் கொடுக்கப்பட்டது. அவர்களை வெளியேற்றவில்லை என்றார்.
