அதானியும் கார்ப்பரேட் கவசமும்
சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ‘நம்பிக்கை’ என்ற பெயரில் எளிய மக்களின் பணத்தைச் சுரண்டும் கார்ப்பரேட் முதலாளித்துவம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எத்தகைய தந்திரங்களைக் கையாளும் என்பதற்கு அதானி மீதான அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) தற்போதைய நகர்வுகளே சாட்சி. லஞ்சப் புகார்கள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் சிக்கி யுள்ள கவுதம் அதானி மற்றும் அவரது சகோதரி மகன் சாகர் அதானிக்குச் சம்மன் அனுப்ப முடி யாமல், அமெரிக்காவின் எஸ்இசி அமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசு மற்றும் அதன் சட்ட அமைச்ச கம், ‘முத்திரை இல்லை’, ‘கையெழுத்து இல்லை’ போன்ற தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி சம்மனைத் திருப்பி அனுப்புவது, ஒரு பெரும் முதலாளியைக் காக்க ஒட்டுமொத்த அரசு எந்திரமும் எப்படிக் கவசமாகச் செயல்படு கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஹேக் உடன்படிக்கையின் கீழ் இயல்பாக நடக்க வேண்டிய ஒரு சட்ட நடைமுறை, 14 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருப்பது சாதாரணமானதல்ல. இது அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான நெருக்க மான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.
ஏழை எளிய மக்கள் மீது சட்டத்தின் சவுக்கு மிக விரைவாகச் சுழலும் நிலையில், கோடிக்கணக்கான டாலர்களைக் கையாடல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டும் சர்வதேச விதிகள் வளைக்கப்படுவது ஏன்? இந்திய இறையாண்மை என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும். தற்போது, தூதரக வழிகளைப் புறக்கணித்துவிட்டு மின்னஞ்சல் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் சம்மன் அனுப்ப எஸ்இசி முடிவெடுத்திருப்பது, இந்திய அதிகார வர்க்கத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மை யையே வெளிப்படுத்துகிறது. 175 மில்லியன் டாலர் முதலீட்டாளர் பணம் மோசடி செய்யப் பட்டதாகக் கூறப்படும் நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கும் இத்த கைய போக்கு, ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்ற ஜனநாயகக் கோட்பாட்டையே கேள்விக்குறியாக்குகிறது.
தன் சகோதரி மகன் சாகர் அதானியுடன் இணைந்து கவுதம் அதானி நடத்தியதாகக் கூறப் படும் இந்த ஊழல் , ஒரு நாட்டின் வளங்க ளைச் சுரண்டி உலக அரங்கில் செல்வாக்கு செலுத்தும் ஏகபோக முதலாளித்துவத்தின் கோர முகமாகும். அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, அதிகார மட்டத்தி லுள்ள தனிநபர்களைக் காப்பாற்றும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக் குமா? கார்ப்பரேட் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் சேர்த்த சொத்துக்கள் மக்கள் நலனுக்காகப் பறிமுதல் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இந்த அநீதிக்கு எதிராக சர்வதேச அளவிலும் குரல் கள் எழ வேண்டும்.
