headlines

img

தொகுதி மேம்பாட்டு நிதி: அதிர்ச்சி தரும் முறைகேடு

தொகுதி மேம்பாட்டு நிதி: அதிர்ச்சி தரும் முறைகேடு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மற்றும் மாநிலத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழங்கப்படுவதுதான் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS). ஆனால், சமீ பத்திய புள்ளிவிவரங்கள் இந்த நிதி ஒதுக்கீட்டில் நிலவும் அதிர்ச்சிகரமான முறைகேடுகளையும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை நோக்கிய அரசி யல் சார்புநிலையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. ஆங்கில நாளிதழ் ஒன்று வெளி யிட்டுள்ள தரவுகளின்படி, 2023 முதல் 2026 வரை யிலான காலக்கட்டத்தில், மாநிலங்களுக்கு வெளியே செலவிடப்பட்ட நிதியில் 84 சதவீதத் திற்கும் மேலானது உத்தரப் பிரதேச மாநிலத்தி ற்கு மட்டுமே சென்றுள்ளது என்பது அப்பட்ட மான பாரபட்சமாகும்.

வெறும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இத்தகைய விசித்திரமான நிதி ஒதுக் கீட்டைச் செய்துள்ளனர். இதில் பாஜக எம்.பி-க்க ளின் பங்கு மிக முக்கியமானது. ஜம்மு - காஷ்மீ ரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் குலாம் அலி கட்டானா, தனது மாநிலத்தின் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தனது நிதியில் 95 சதவீதத்தை (சுமார் 12 கோடி ரூபாய்) உத்தரப் பிரதேசத்தில் எல்.இ.டி விளக்கு கள் பொருத்தச் செலவிட்டுள்ளார். இதேபோல், உத்தரகண்ட் பாஜக எம்.பி மாலா ராஜ்ய லட்சுமி  ஷா, தனது நிதியில் 57 சதவீதத்தை (சுமார் 50 லட்சம் ரூபாய்) உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தின் 2 கிராமங்களில் நடைபாதை அமைக்கச் செலவிட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சன்னிலால் கராசியா, தனது நிதியில் 80 சதவீ தத்தை (98 லட்சம் ரூபாய்) உத்தரப் பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்களில் எல்.இ.டி விளக்கு கள் பொருத்த மடைமாற்றியுள்ளார்.

மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திர கெலாட், பீகாரைச் சேர்ந்த சதீஷ் சந்திர துபே  போன்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு திட்டங்களு க்குத் தங்கள் நிதியை வாரி வழங்கியுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலம், ஒட்டுமொத்த மேம்பாட்டு நிதியில் வெறும் 0.6 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி யுள்ள நிலையில், அங்கிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் உத்தரப் பிரதேசத்திற்கு நிதியை மடைமாற்றுவது அந்தந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு,  ‘வளர்ச்சி’ என்று பேசிக்கொண்டே, பின்தங்கிய  மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அரசி யல் ஆதாயம் தரும் மாநிலங்களுக்குத் தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம் ஏற்கெனவே மற்ற மாநிலங்களை விட இருமடங்கு அதிக மாக (தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு) இந்த நிதியைப் பயன்படுத்தி வரும் சூழலில், மற்ற மாநிலங்களின் பங்கையும் அங்கே குவிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதி ரானது.