வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
இராஜபாளையம், ஜன.23- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் ராஜீவ் காந்தி தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி வத்திராயிருப்பில் நடைபெற்றது. வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி ஆணையர் (கலால்)ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
