தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 277 பேருக்கு பணி நியமன ஆணை
தேனி ,ஜன.23- தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 277 வேலைநாடுநர்களுக்கு தனி யார்துறைகளில் பணிபுரி வதற்கான பணிநியமன ஆணைகளை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். வீரபாண்டி அரசு கலை அறிவியல் மற்றும் கல்லூரி யில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகா மில் 50-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம் முகாமில் தெரிவுசெய்யப் பட்ட 277 வேலைநாடுநர்க ளுக்கு தனியார்துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளையும், 89 வேலைநாடுநர்களுக்கு திறன் பயிற்சி பெறுவதற் கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமாபிர பா, கல்லூரி முதல்வர் உமா தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
