நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்து தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இன்று ஓய்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களானர்கள் 6 பேரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் திமுகவை சேர்ந்த பி.வில்சன், முகமது அப்துல்லா, பி.சண்முகம். பாமக அன்புமணி மதிமுக தலைவர் வைகோ, மற்றும் அதிமுகவை சேர்ந்த என்.சந்திரசேகரன் ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெற்றனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் பதவியேற்கவுள்ளனர். ஏற்கனவே எம்.பியாக இருந்த பி.வில்சன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து திமுகவை சேர்ந்த சல்மா, சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன், அதிமுக வை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.