world

img

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்! - பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொலை

காசாவின் நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்குட்பட்ட நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று இரு முறை தொடர்ந்து தாக்குதல் நடத்தியதது. இதில் 4 ஆவது தளத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டதாகவும், 5 பத்திரிகையாளர்கள், 4 சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் 64 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில், ஏபி பத்திரிகையாளர் மரியம் டக்கா, அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் முகமது சலாம், ராய்ட்டர்ஸ் ஒளிப்பதிவாளர் ஹுஸாம் அல்-மஸ்ரி, ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் மோவாஸ் அபு தாஹா மற்றும் அஹ்மத் அபு அஜிஸ் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.