சென்னை, மார்ச் 21- மக்களின் குடியிருப்புகளுக்கு அரு கிலேயே அத்தியாவசியப் பொருட் களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடை கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேர வையில் வெள்ளியன்று(மார்ச்19) முதலமைச்சர் அறிவித்தார். பேரவையின் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிரா மத்தில் ரூ. 15.85 கோடியில் மாநில அளவி லான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும். 105 கூட்டுறவு கடன் நிறுவனங்க ளுக்கு ரூ. 27.74 கோடியில் சொந்த அலு வலகக் கட்டிடங்கள் கட்டப்படும். 95 கூட்டுறவு நிறுவனங்கள், ரூ. 14.75 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும். மக்களின் குடியிருப்புகளுக்கு அருகி லேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நக ரும் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்ப டும். 30 வருடங்களுக்கு மேலான, எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐஐடி யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட் பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் ரூ. 100 கோடி யில் கட்டப்படும்.
புதிய கல்லூரிகள்
உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிரா மப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும். வேளாண் மண்டலமாக அறிவிக் கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்க ளில் வேளாண் பெருமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகை யில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ள ளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் ரூ. 225 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தடுப்பூசி
விவசாயிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். குமரி மாவட்டம், தேங்காப்பட்ட ணம் மீன்பிடி துறைமுகத்தில் முதல் கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதி கள் ரூ.60 கோடி செலவில் ஏற்படுத்தப்ப டும். திருவள்ளூர் மாவட்டம், பழ வேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களினால் மூடாத வாறு இருக்க, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.