what-they-told

img

முதுமலை அருகே அழுகிய நிலையில் ஆண் புலி

உதகை, டிச.11-  முதுமலை அருகே அழு கிய நிலையில் ஆண் புலி இறந்து கிடந்தது தொடர் பாக வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பக வெளிமண்டலத்திற் குட்பட்ட வனப்பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் வெள்ளியன்று காலை வழக்கம்போல் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதியில் ரோந்து பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். அப்போது தொரப்பள்ளி - தெப்பக்காடு சாலையில் இருந்து 5 கி.மீ தொலையில் அடர்ந்த வனத்தில் முதலைமடுவு நீரோடையில் உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்தனர்.   இதுகுறித்து தகவல் அறிந்த கள இயக்குநர் வெங்கடேஷ், துணை இயக்குநர் அருண்குமார், தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற் றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட் டோர் சம்பவ இடத்திற்கு சென்று புலியின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகள்படி அதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தடய வியல் சோதனைக்காக மாதிரிகள் சேகரிக் கப்பட்டன. பிரேத பரிசோதனையில் இறந்து கிடந்தது ஆண் புலி என்பதும், அதன் உடல், கழுத்து மற்றும் இடதுபுற தோள் பகுதியில் கடுமையான காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இத னால் மற்றொரு ஆண் புலியுடன் ஏற் பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு உயி ரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.  இதையடுத்து புலியின் சடலம் அங்கேயே எரியூட்டப்பட்டது. 

;