tamilnadu

img

ஏர் இந்தியா விமான விபத்து: இழப்பீடு வழங்குவதில் கால தாமதம்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆர்.சச்சிதாநந்தம் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
"ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 260 பேர் உயிரிழந்த சோகத்தில் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு கூட கிடைக்கவில்லை.
242 பேர் விமானத்தில் பயணித்தனர், 260 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஜூலை 18 வரை 128 குடும்பங்களுக்கு மட்டுமே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.
விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களின், குடும்பத்தினருக்கு உதவி வழங்கப்படுவது குறித்து ஒன்றிய அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.