tamilnadu

img

‘தி கேரளா ஸ்டோரி’-க்கு தேசிய விருது சமூக பிளவை ஊக்குவிக்கும் வேலை! முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்

‘தி கேரளா ஸ்டோரி’-க்கு தேசிய விருது சமூக பிளவை ஊக்குவிக்கும் வேலை! முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்

திருவனந்தபுரம், ஆக. 2 - 71-ஆவது தேசிய திரைப்பட விருது கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில்,  சர்ச்சைக்குரிய ‘தி கேரளா  ஸ்டோரி’ படத்திற்கு, சிறந்த ஒளிப்பதி வுக்கான விருது வழங்கப்பட்டதற்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி  விஜயன், கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.  இந்த படம் புனையப்பட்ட தக வல்களை பரப்பி கேரளத்தின் புகழை  கெடுக்கும் நோக்கத்துடன் உரு வாக்கப்பட்டது என்றும், அதற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது, பிரி வினைவாத கருத்தாக்கத்தை ஊக்கு விக்கக் கூடியது என்றும் குற்றம் சாட்டி யுள்ளார். மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’க்கு அளிக்கப்பட்டுள்ள விருது, கேர ளத்தின் சமூக ஒற்றுமை மற்றும் நல்லி ணக்க பாரம்பரியத்தை கேள்விக்குள் ளாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் நிலைப்பாடு இதுதொடர்பாக, தமது சமூக வலை தளப் பக்கங்களில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விருது வழங்கப்பட்டது, ‘சங்- பரிவார்’ என்ற  பிரிவினைவாத அமைப்பின் கருத்துக் களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது” என்றும், முத லமைச்சர் பினராயி விஜயன் கடுமை யாக விமர்சித்துள்ளார். “கேரளம், சமய பிரிவினைகளுக்கு எதிராக எப்போதும் ஒரு ஒளி விளக்  காக நின்றிருக்கிறது. இந்த முடிவு அந்த மதிப்பை கேள்விக்கு உள்ளாக்கு கிறது” என்று தெரிவித்திருக்கும் முத லமைச்சர், “இந்த படம் கேரளாவின்  பிம்பத்தை கெடுத்து சமூக ஒற்றுமை யை சீர்கெடுக்கும் நோக்கத்தில் தவ றான தகவல்களை பரப்புகிறது” என்று  குற்றம் சாட்டியுள்ளார். சர்ச்சையான  ‘தி கேரளா ஸ்டோரி’ 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், சுமார் 303.97 கோடி  ரூபாய் வசூல் செய்த வணிக வெற்றிப் படமாக கருதப்படுகிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப் பில் சேர்க்கப்படுகிறார்கள் என்று  பொய்யான ஒரு உள்ளடக்கத்தையும், குறிப்பாக, ‘லவ் ஜிகாத்’ என்ற சர்ச்  சைக்குரிய கோட்பாட்டையும் அடிப்ப டையாகக் கொண்டு உருவாக்கப்பட்டி ருந்தது. படத்தின் முன்னேற்பாட்டு விளம்பரங்களிலும் 32,000 பேர் மத மாற்றம் செய்யப்பட்டதாக தவறான புள்ளிவிவரங்கள் அள்ளி வீசப்பட்டு, பின்னர் அவற்றை நீக்க நீதிமன்றங்கள் தலையிட்டு உத்தரவிட்டன. அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு இந்தப் படம் இந்த சிக்கலான சூழலை எளிமையாக்கி, சமய பிரிவி னையை தூண்டும் வகையில் கதை  அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. கேரள அரசு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல்  கட்சிகளும் இந்த படத்தை “சமூக பிரி வினைக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களை பரப்புவதாக” கண்டனம் தெரிவித்தன. மேற்கு வங்க அரசு, இந்த படம் சமூக அமைதியை கெடுக்கும் என்ற கார ணத்தால் 2023-ஆம் ஆண்டில் அதன் திரையிடலுக்கே தடை விதித்தது.  திரையுலகின் மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கு சவால் இந்நிலையிலேயே, இந்த படத் திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது, இந்திய திரையுலகின் புனிதமான மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கு சவா லாக உள்ளது என்று அரசியல் ஆய்வா ளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவ றான தகவல்களை பரப்பி சமூக பிளவை  ஏற்படுத்தும் படங்களுக்கு அரசு அங்கீ காரம் அளிப்பது, கலைத்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள் காக்குகிறது என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகா ரத்தில் அனைத்து ஜனநாயகவாதி களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர் கள் வலியுறுத்துகின்றனர்.