tamilnadu

img

சிறப்புத் திருத்தம் மூலமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்!

சிறப்புத் திருத்தம் மூலமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது தேர்தல் ஆணையம்!

பாட்னா, ஆக. 2 - பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பாஜகவுக்கு எதிரான வாக்  காளர்கள், சிறுபான்மையினரின் வாக்கு களை நீக்கும் மறைமுகத் திட்டத்துடன் கடுமையான நிபந்தனைகளை தேர்தல்  ஆணையம் விதித்தது. இதற்கு எதிர்க்கட்சி கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரி வித்து வந்தனர். உச்ச நீதிமன்றமும் பல்  வேறு கேள்விகளை, தேர்தல் ஆணையத் திற்கு எழுப்பியிருந்தது. இந்நிலையில் பீகார் மாநிலத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்  பட்டுள்ளன. இதன் மூலம் பீகார் வாக்கா ளர்களின் எண்ணிக்கை 7.24 கோடியாக குறைந்துள்ளது. இந்த சிறப்பு திருத்த நடவடிக்கை மூலமாக இறந்தவர்கள் என்ற வகையில் 22.34 லட்சம் பேரின் பெயர்களும், நிரந்த ரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது  தெரியாத நிலையில் 36.298 லட்சம் பேரும்,  இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்தி ருந்த வகையில் 7.01 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தலைநகர் பாட்னாவில் உள்ள 3.95  லட்சம் வாக்காளர்கள், மதுபனி மாவட்டத் தில் 3.52 லட்சம் வாக்காளர்கள், கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் இருந்து 3.16 லட்சம் வாக்காளர்கள், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 3.10 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகா ரப்பூர்வ இணையதளத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதில், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.