மாதர் சங்க மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாடு, செப்டம்பர் 24-27 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினை, சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட மாநாட்டில், சனிக்கிழமையன்று (ஆக. 2) வெளியிடப்பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி. பிரமிளா, மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா ஆகியோர் இலச்சினையை வெளியிட்டனர். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செயலாளர் வி.தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.