articles

img

அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் மின்சார நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்க!

அந்தமான் - நிக்கோபர் தீவுகளின் மின்சார நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்க!

ஒன்றிய அமைச்சரிடம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. நேரில் முறையீடு

புதுதில்லி, ஆக. 2- அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் நீடித்து வரும் கடுமையான மின்சார நெருக்கடி குறித்து ஒன்றிய மின்சார, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம்,விரிவான முறையீடு செய்துள்ளார். இச்சந்திப்பில் கட்சியின் அந்தமான் - நிக்கோபர் மாநிலச் செயலாளர் டி.அய்யப்பன் பங்கேற்றார்.  ஜூலை 31ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தை அமைச்சரிடம் நேரிலும் அளித்த ஆர்.சச்சிதானந்தம் எம்.பி, பல ஆண்டுகளாக நீடித்து வரும் மின்சார பிரச்சனையால் அந்த மான் நிக்கோபர் தீவுவாசிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசு பொறுப்பை  கைவிட்டதாக குற்றச்சாட்டு அந்தமான் - நிக்கோபர் நிர்வாகம் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அரசு மின்சார துறையின் மின் விநியோகம் போதுமானதாக இல்லாமல் அடிக்கடி மின் வெட்டுகள் ஏற்பட்டு மக்கள் துன்பத்தில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசு நிர்வாகம் ஜெனரேட்டர் செட் இயக் கத்தை நிறுத்திவிட்டதாகவும், குறைந்தபட்சம் தேவையான 48 மெகாவாட் மின்சாரம் கூட வழங்க தவறிவிட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சூரிய மின்சாரத்தில்  அடிப்படை குறைபாடுகள் என்டிபிசி நிறுவனத்தின் உதவியுடன் மீண்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக சூரிய மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருந்தாலும், தீவுகளின் புவியியல் சூழல் - குறிப்பாக கடுமையான பருவ மழையை கருத்தில் கொள்ளப்படாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விமர் சித்துள்ளார். போர்ட் பிளேர் மற்றும் தெற்கு அந்தமானில் உள்ள சூரிய மின்சார ஆலைகளுக்கு போது மான பேட்டரி காப்புறுதி அமைப்பு வழங்கப்படாத தால், முக்கிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சார பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும், நிர்வாகம் அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் கூரை மேல் சூரிய மின்சார ஆலைகளை நிறுவும் திட்டத்தை முன்னெடுத்த போதிலும், கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் இதன் மாற்று வழிமுறைகளை ஆராயத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 50 மெகாவாட் நீர்ம எரிவாயு ஆலைக்கு அனுமதி கோரிக்கை மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக ஹோப் டவுனில் 50 மெகாவாட் திறன் கொண்ட எல் என்ஜி (நீர்ம இயற்கை எரிவாயு) மின்சார ஆலை நிறுவுவதற்கான முன்மொழிவு ஒன்றிய மின்சார அமைச்சகத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக குறிப்பிட்ட சச்சிதானந்தம் எம்.பி, இதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். தனியார்மயமாக்கல் எதிர்ப்பு அந்தமான் - நிக்கோபர் அரசு நிர்வாகம் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, மக்களுக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்கும் பொறுப்பை புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த தனியார்மயமாக்கல் மின்சார கட்டணங்களை அதிகரித்து, தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், மாணவர்கள், மருத்துவ நிறு வனங்கள் மற்றும் சமுதாயத்தின் பலவீனமான பிரிவினரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து, அவர்களிடையே நெருக்கடியை தீவிரமாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடி நடவடிக்கை கோரிக்கைகள் ஒன்றிய அரசு பின்வரும் உடனடி நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சச்சிதானந்தம் எம்.பி. கோரியுள்ளார்: போர்ட் பிளேர் மற்றும் தெற்கு அந்தமானில் உள்ள சூரிய மின்சார ஆலைகளுக்கு உடனடி யாக ஒருங்கிணைந்த சூரிய மின்சார பேட்டரி அமைப்பு நிறுவ வேண்டும். நிலத்தில் அல்லது மிதக்கும் சூரிய மின்சார ஆலைகளை போதுமான பேட்டரி காப்புறுதியு டன் நிறுவ வேண்டும்.. ஹோப் டவுன் கிராமப்புற தெற்கு அந்தமா னில் 50 மெகாவாட் திறன் கொண்ட எல் என் ஜி மின்சார ஆலை நிறுவுவதற்கு விரைவான அனுமதி வழங்க வேண்டும். நிரந்தர தீர்வுக்கான வேண்டுகோள் அந்தமான் - நிக்கோபர் மக்களின் அத்தியா வசிய தேவையான நிரந்தர மின்சார விநியோக ஆதாரத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச் சரிடம் சச்சிதானந்தம் எம்.பி. வலியுறுத்தினார். தீவுகளின் மின்சார நெருக்கடி தீர்க்கப்படா மல் போனால், அது மக்களின் அன்றாட வாழ்க் கையை மேலும் கடினமாக்கி, பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் சுட்டிக் காட்டினார். விபரங்களை கேட்டுக் கொண்ட அமைச்சர் மனோகர் லால் கட்டார், உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தார்.