தமுஎகச மாநில மாநாட்டு இலச்சினை வெளியீடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு டிசம்பர் 5,6,7 தேதிகளில், தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டிற்கான இலச்சினையை சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சனிக்கிழமையன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இசை பயிற்சி முகாமில் வெளியிட்டார். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.