பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாஜக கூட்டணி கட்சியான மதச் சார்பற்ற ஜனதாளத்தின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான குமாரசாமியின் அண்ணன் மகனு மான பிரஜ்வால் ரேவண்ணா (33) 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 3000க்கும் வீடியோக்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது 5 பிரிவுகளில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரஜ்வால் ரேவண்ணாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, பெங்களூரு சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிந்து, பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இன்று பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.