states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., கே.ராதாகிருஷ்ணன்

நாட்டில் சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகிறார்கள் என்று சொல்லும் போது புரிந்துகொள்ள முடியாத வர்களுக்கு இப்போது சத்தீஸ்கர் சம்பவம் மூலம் உண்மை நிலவரங்கள் தெளிவாக உணரப்படும் என்று நினைக்கிறேன். கடந்த 11 ஆண்டுகளாக சிறு பான்மையினரும் ஏழை மக்களும் பலவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் ஆன்மா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான உரிமையை வழங்குகிறது. ஆனால் இன்று அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய பாஜக கூட்டணி அமைச்சர் மாணிக் ராவை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அழுத்தம் கொடுத்தன. ஆனால் அமைச்சரின் இலாகா மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இலாகாவை மாற்றுவது அரசாங்கத்தின் பிம்பத்தைக் காப்பாற்றாது. கறைபடிந்த அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

சிபிஐ எம்.பி., சந்தோஷ்

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கேரள கன்னி யாஸ்திரிகளை சந்தித்தோம். இது கேரள மக்களுக்கு மகிழ்ச்சியான தருணம். அரசிய லமைப்பை ஆதரிக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவ வேண்டும் என்று விரும்பும் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். முழு கேரளமும் கன்னியாஸ்திரிகளுக்கு பின்னால் நின்றது.