வனத்துறையினரின் தாக்குதலில் பழங்குடியினத்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையை சேர்ந்த 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு கிராமம் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்து வனச்சரக அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணமான வனச்சரகர் உள்ளிட்டு வனத்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டுமெனவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் சிபிஎம் வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.