‘நலன் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவத் திட்டம் சென்னையில் முதலமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை, ஆக.2- தமிழகம் முழுவதும் மக்களுக்கு உயர் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை, சென்னை மயி லாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச் சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலா ளர் நா. முருகானந்தம், மேயர் பிரியா, பத்திரிகையாளர் என். ராம், மக்களவை மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் சாதிக்க முடியும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. அவர் களை இனி மருத்துவப் பயனாளி கள் என்று அழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மருத்துவமனையில் இருந்தா லும் மக்கள் பணியாற்றுவதே தனது விருப்பம் என்று கூறிய முதல்வர், “என் உடலில் நோய் இருந்தாலும் மக்களைச் சந்தித் தாலே நோய் சரியாகி விடும். மக் கள் நலப் பணிகளைச் செய் தாலே, என் உடல் நலம் சரியாகி விடும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இதன்படி தமிழகம் முழுவதும் ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத் திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட் சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட் சம் மக்கள் தொகைக்கு அதிக மாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநக ராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக் கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாந கராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இம்முகாம்கள் சிறப்பு மருத் துவ வசதிகள் குறைந்த ஊரக பகு திகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்ப டையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியக் கூடிய உயர்தர மருத்துவப் பரிசோதனை உள் ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த முகாம்களில் மேற்கொள் ளப்படும். காலையில் மருத்துவப் பரிசோதனை செய்தால் மாலை யில் வாட்ஸ்-ஆப் மூலம் மருத்து வப் பரிசோதனை அறிக்கை களைத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.