states

img

சத்தீஸ்கரில் கைதான கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுவிப்பு!

கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமீனில் விடுதலை!

சத்தீஸ்கர் பாஜக அரசு தொடுத்த பொய் வழக்கு

இடதுசாரி எம்.பி.க்கள் வரவேற்பு துர்க், ஆக.2- பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில், சத்தீஸ்கர் பாஜக அரசால் கைது செய்யப்பட்ட கேரள கன்னி யாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகியோர் ஜாமீனில் விடு தலையாகினர். இவர்களின் கைதுக்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்தி ருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலை வர்களின் வலுவான கண்டனத்தை  வெளியிட்டதுடன், கன்னியாஸ்திரி களின் விடுதலைக்கு நேரடி தலையீடு களை மேற்கொண்டு வந்தனர். இந்தப் பின்னணியில், சத்தீஸ்கர் பாஜக அரசின் கடுமையான எதிர்ப்பை யும் மீறி, என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தலா  ரூ. 50,000-க்கு இரண்டு நபர் ஜாமீன் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து, சனிக்கிழ மையே கன்னியாஸ்திரிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த  கன்னியாஸ்திரிகளை, அங்கு திரண்டி ருந்த இடது ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜான் பிரிட்டாஸ், பி. சந்தோஷ் குமார்,  ஜோஸ் கே மாணி ஆகியோரும், ஏரா ளமான சமூக ஆர்வலர்களும் உற்சா கத்துடன் வரவேற்று, இனிப்பு வழங்கி  மகிழ்ச்சி தெரிவித்தனர். இடதுசாரி எம்.பி.க்கள் ஜான் பிரிட்  டாஸ், பி. சந்தோஷ் குமார் மற்றும் ஜோஸ் கே மாணி ஆகியோர் கூறுகை யில், கன்னியாஸ்திரிகள் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் உறுதி யாக இருப்பதாக தெரிவித்தனர். சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம் -  பிரிவு 4, மனித கடத்தல் (இந்திய தண்ட னைச் சட்டம் - பிரிவு 143) மற்றும் தேச  விரோத நடவடிக்கைகள் (BNS பிரிவு 152) ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில்  சகோதரி பிரீத்தி மேரி மற்றும் சகோ தரி வந்தனா பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வீட்டு வேலைசெய்ய பெற்றோரின் அனுமதியுடன் வந்த பெண்களையும், உறவினர்களைச் சந்திக்க வந்த கன்னியாஸ்திரிகளையும் ஜூலை 24  காலை 8:30 மணியளவில் துர்க் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்  டர்கள், பாஜக அரசின் துணையோடு பொய் வழக்கில் கைது செய்ய வைத்தனர். கன்னியாஸ்திரிகள் மீது 10 ஆண்டு கள் வரை சிறைத்தண்டனை விதிக்  கக்கூடிய கடுமையான குற்றங்களை சுமத்திய சத்தீஸ்கர் பாஜக அரசு, ஆதா ரம் இல்லாததன் காரணமாக, சாமர்த்தி யமாக ‘கட்டாய மதமாற்றம்’ என்ற குற்றச்சாட்டை தவிர்த்து விட்டு, தேச விரோத நடவடிக்கைகளுக்கான பிரிவு களைச் சேர்த்தது. இந்நிலையி லேயே, இடதுசாரிகளின் வலுவான  தலையீட்டின் பின்னணியில், அவர் கள் தற்போது நீதிமன்றத்தாலேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள னர்.