சென்னை,அக்டோபர்.24- தமிழ்நாட்டில் கனமழைக் காரணமாக 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கனமழைக் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.