weather

img

கனமழை எச்சரிக்கை - பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல்!

சென்னை,டிசம்பர்.09- கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் டிசம்பர் 10 முதல் நான்கு நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.