டெக்சாஸில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 88-ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கெர் மாவட்டத்தில் 75 உடல்களை மீட்டுள்ளனர். இதில் 48 பெரியவர்களும், 27 சிறுவர்களும் அடங்குவர். மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த வெள்ளத்தை நூற்றாண்டு பேரழிவு என்று விவரித்து மத்திய நிவாரண நிதியை விடுவித்துள்ளார். மழை எச்சரிக்கைகள் தொஅர்ந்து நீடிப்பதால், மேலும் வெள்ள அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வ் மையம் எச்சரித்துள்ளது.