world

img

பெண்களுக்கு எங்குமே முழுமையான பணியிட சமத்துவம் இல்லை

பெண்களுக்கு எங்குமே முழுமையான பணியிட சமத்துவம் இல்லை 

வாஷிங்டன்,பிப்.25- பெண்களுக்கு உலகில் எங்குமே பணியிடத்தில் முழுமையான சமத்துவம் (சமநிலை) இல்லை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘பெண்கள், வணிகம் மற்றும் சட்டம்’ (Women, Business and the Law) என்ற தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பணியிடங்க ளில் இருக்க வேண்டிய சமத்துவம் தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டா லும், அவை நடைமுறையில் பின்பற் றப்படுவதே இல்லை என அவ்வறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.  மேலும் உலக நாடுகளில் பணியி டங்களில் ஆண்களுக்கு நிகரான, முழுமை யான சமத்துவம் பெண்களுக்கு இல்லை  என்றும், மிகக்குறைந்த எண்ணிக்கையி லான பெண்களே அத்தகைய சூழ லுக்கு நெருக்கமான (குறைந்த பட்ச சமத்துவம்) நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.  சட்டங்களை நவீனப்படுத்தியதாகச் சொல்லப்படும் நாடுகளில் கூட, பெண்கள் என்ன வேலை செய்ய வேண்டும், என்ன தொழில் தொடங்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு போன்ற விஷயங்களில் இன்னும் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 120 கோடி இளைஞர்கள் புதிய வேலை களுக்கு செல்ல உள்ளனர். இதில் பாதி பேர் பெண்கள். இந்த எண்ணிக்கையில்  பெண்களுக்கு அதிகளவில் சமூக மற்றும் சட்ட ரீதியான தடைகள் உள்ள நாடு களை சேர்ந்தவர்களே அதிகம் என்பதால், அங்கு சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. பெண்களுக்கு சமமான வேலை வாய்ப்புகளை உறுதி செய்வது அவர்க ளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூ கத்திற்குமே பெருமளவு பயனளிக்கும். பெண்கள் அதிக வாய்ப்புகளைப் பெறும் நாடுகளில், ஆண்களின் வேலைவாய்ப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  தற்போது வளர்ந்த பொருளாதார நாடு களில் பணியிட சமத்துவம் ஓரளவிற்கு நிலவுகிறது. அதில் ஸ்பெயின் முத லிடத்தில் உள்ளது என குறிப்பிடப் பட்டுள்ளது.  அதேபோல அடிப்படைவாத அமைப்பு களால் ஆட்சி செய்யப்படும் மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் இந்த பணியிட சமத்துவத்தில் மிக மோச மாக பின்தங்கியுள்ளன எனவும் அறிக்கை யில் தெரிய வந்துள்ளது.