world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யப் போர் நிறுத்தம்  ஐ.நா பொது அவை தீர்மானம்  

உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஐ.நா அவையில் கொண்டு வந்த உக்ரைன் -ரஷ்யப் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐநா பொது அவையின் 11 ஆவது அவசர சிறப்பு அமர்வில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா உட்பட 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. அமெரிக்கா உள்ளிட்ட 51 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இத்தீர்மா னத்தில் உடனடியான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் வேண்டும். விரிவான, நீதியான மற்றும் நீடித்த அமைதி வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் நிலச்சரிவு பிரேசிலில் 30 பேர் பலி

 பிரேசிலில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந் துள்ளது. மேலும் 39 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். திங்கட்கிழமை மதியம் தொடங்கிய கனமழை யினால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டதில் மக்கள் குடி யிருப்புகள் சேதமடைந் துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.