புதுதில்லி,ஜனவரி.02 - கடந்த ஆண்டுகளை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள ஆண்டாக 2024 உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான 2024ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்குப் பிறகு 2024ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. நீண்டகால சராசரியைவிட இந்த ஆண்டில் 0.90 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் இருந்தது என இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவர் மிருத்யஞ்செய் மொகோபாத்ரா பேட்டியளித்துள்ளார்.
2025 ஜனவரி மாதம் மட்டும் வட இந்தியப் பகுதியில் 122% வரையும் இயல்பைவிட 118% கூதலாகவும் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிடக் கூடுதலாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.