weather

img

விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு!

சென்னை,மே.20- தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது ஆனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 4-5 நாட்களில் தமிழ்நாடு மற்றும் கேரளத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.