weather

img

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை நீலகிரிக்கு கடந்த 5 நாட்களாக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.