weather

img

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழையும், 6 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி, கோவையின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனி மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.