weather

img

இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடலுக்குச் செல்லும் முன் வானிலை தகவல்களை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.