weather

img

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது!

காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற்றியுள்ளது.
சென்னையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
வட தமிழ்நாடு புதுச்சேரியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. 
இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.