சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் புறக்கணிப்பு புதுச்சேரி முதல்வரிடம் நேரில் முறையீடு
புதுச்சேரி, மார்ச் 10- சர்வதேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் புறக்கணிப்பு எதிரொலியாக அரசு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ரங்கசாமியிடம் வீரர்கள் நேரில் முறையிட்டனர். புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்கம் மற்றும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சர்வதேச தேசிய மற்றும் தென் மண்டலம் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டி களில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற புதுச்சேரி விளையாட்டு வீரர்க ளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை கம்பன் கலை யரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஆகியோர் கலந்து கொண்டு 2024-2025 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த புதுச்சேரி வீரர்களுக்கு ரொக்கப் பரிசினை வழங்கி உரையாற்றினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், விளையாட்டு துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, துறை இயக்குநர் சுதாகர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். முதல்வரிடம் முறையீடு முன்னதாக பளுதூக்கும் போட்டி யில் பதக்கங்கள் பெற்ற வீரர் மது (எ) லிங்கேசன் வேலு தலைமையில் விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற தங்கம் ,வெள்ளி ஆகிய பதக்கங்கள் அணிந்து வந்து விழாவில் பங்கேற்ற அதிகாரிகளிடம் முறையிட்டனர். கடந்த 2004 ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஊக்கத்தொகை கேட்டு விண்ணப்பித்த, எங்களுக்கு ஏன் பரிசுத்தொகை வழங்கவில்லை, எந்த ஒரு போட்டியானாலும் எங்கள் சொந்த செலவில் தான் பயணம் மேற்கொள்கிறோம் என்று அதி காரிகளிடம் நியாயம் கேட்டனர். அப்போது விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ரங்கசாமி வீரர்களிடம் நேரில் சென்று என் கவனத்திற்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளி டம் பேசி அனைத்து வீரர், வீராங்க னைகளுக்கு பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். விளையாட்டு வீரர்களின் இச்செயலால் அப்பகுதியில் பெறும் பரப்பரப்பு ஏற்பட்டது. ஏற்க னவே, விளையாட்டு வீரர்களை புறக்கணிக்க கூடாது என்று அனைத்து வீரர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
