அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி சமூக நீதி விடுதி மாணவர்கள் போராட்டம்
கடலூர், மார்ச் 10- கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி யின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமுக நீதி விடுதியில் 80 க்கும் மேற்பட்ட மாண வர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இவர்க ளுக்கு உணவு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் இருக்கிறது. விடுதிகாப்பாளர் முறையாக விடுதிக்கு வருவதில்லை, 5 சமையலர் இருந்த இடத்தில் 10 மாதமாக ஒரு சமையல்காரர் மட்டுமே உள்ளார். அவரும் நேரத்திற்கு வந்து உணவு சமைத்து வழங்காததால் மாணவர்கள் கல்லூரி தேர்வு காலத்திலும் சரியான நேரத்திற்கு செல்ல முடிய வில்லை. உணவு சாப்பிடாமல் பட்டினியாக கல்லூரிக்கு செல்லும் நிலையில் உள்ளனர். குடிநீர் கருப்பு நிறத்தில் வரு கிறது என்றும், குளிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என்றும், குளியலறை கதவு உடைந்து உள்ளது என்றும், சமையல் கூடமே கழிவறை போல் உள்ளதாக குற்றம் சாட்டி மாணவர்கள் ஆதிதிராவி டர் நலத்துறை அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாண வர்கள் செவ்வாயன்று உணவைப் புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து, உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும். புதியதாக சமையலர் போட வேண்டும். காப்பாளர் விடுதியில் தங்க வேண்டும். விடுதி பாது காவலர் போட வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க என்ற கோரிக்கையை முன் வைத்து உணவு சாப்பிடாமல் சர வணன் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தால் ஈடுபட்டனர்.
