weather

img

உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்துக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.