இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு கன்மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 15) முதல் 21ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் 7 முதல் 11 செ.மீ வரை மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.